சொல் பொருள்
மெல்லு
சொல் பொருள் விளக்கம்
மெல்லு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
chew, masticate
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அல்குஉறு பொழுதின் மெல்கு இரை மிசையாது – அகம் 290/5 தனித்துத் தங்கியிருக்கும் காலத்தே மெல்லும் இரையினைத் தின்னாது கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை பைம் கறி நிவந்த பலவின் நீழல் மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா – சிறு 42-45 செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில், மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவிநிற்ப, முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மென்றவாறு நடந்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்