சொல் பொருள்
விரும்பி உறையும் இடம் ஆயின
சொல் பொருள் விளக்கம்
விரும்பி உறையும் இடம் ஆயின
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
are desirable living places
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காடே கடவுள் மேன புறவே ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன – பதி 13/20,21 காடுகள் முனிவர்கள் விரும்பி வாழும் இடமாக, முல்லை நிலங்கள் ஒளிரும் அணிகலன்கள் அணிந்த மகளிரோடு மள்ளர்கள் விரும்பித்தங்கும் இடம் ஆக, – ‘காடே கடவுள் மேன’ என்றது நின் நாட்டுப் பெருங்காடான இடங்களெல்லாம் முதற்காலத்துக் கோயில்களாயின எ-று; புறவு மகளிரொடு மள்ளர் மேன என்றது சிறு காடான இடங்களெல்லாம் நின் படையாளர்கள் மகளிரொடு உறையும் படைநிலைகளாயின எ – று – ஔவை.சு.து. உரை விளக்கம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்