Skip to content

சொல் பொருள்

விரும்பி உறையும் இடம் ஆயின

சொல் பொருள் விளக்கம்

விரும்பி உறையும் இடம் ஆயின

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

are desirable living places

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காடே கடவுள் மேன புறவே
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன – பதி 13/20,21

காடுகள் முனிவர்கள் விரும்பி வாழும் இடமாக, முல்லை நிலங்கள்
ஒளிரும் அணிகலன்கள் அணிந்த மகளிரோடு மள்ளர்கள் விரும்பித்தங்கும் இடம் ஆக,

– ‘காடே கடவுள் மேன’ என்றது நின் நாட்டுப் பெருங்காடான இடங்களெல்லாம் முதற்காலத்துக் கோயில்களாயின எ-று;
புறவு மகளிரொடு மள்ளர் மேன என்றது சிறு காடான இடங்களெல்லாம் நின் படையாளர்கள் மகளிரொடு உறையும்
படைநிலைகளாயின எ – று – ஔவை.சு.து. உரை விளக்கம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *