Skip to content

சொல் பொருள்

விரும்பு, பொருந்து, மேற்கொள்

சொல் பொருள் விளக்கம்

விரும்பு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

desire, be attached, manifest, assume

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் – கலி 62/2

விருப்பத்திற்கு இணங்கமாட்டோம் என்று சொல்வாரையும் விரும்பிக் கையினைப் பற்றிக்கொள்வான்”

ஒருமை வினை மேவும் உள்ளத்தினை – பரி 13/50

உயிர்களைக் காக்கும் ஒரு வினையில் பொருந்திய உள்ளத்தையுடையவன் நீ!

மீட்சியும் கூஉ_கூஉ மேவும் மடமைத்தே – பரி 19/65

மீண்டும் மீண்டும் கூவுதலை மேற்கொள்ளும் மடமையை உடையது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *