சொல் பொருள்
விரும்பு, பொருந்து, மேற்கொள்
சொல் பொருள் விளக்கம்
விரும்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
desire, be attached, manifest, assume
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் – கலி 62/2 விருப்பத்திற்கு இணங்கமாட்டோம் என்று சொல்வாரையும் விரும்பிக் கையினைப் பற்றிக்கொள்வான்” ஒருமை வினை மேவும் உள்ளத்தினை – பரி 13/50 உயிர்களைக் காக்கும் ஒரு வினையில் பொருந்திய உள்ளத்தையுடையவன் நீ! மீட்சியும் கூஉ_கூஉ மேவும் மடமைத்தே – பரி 19/65 மீண்டும் மீண்டும் கூவுதலை மேற்கொள்ளும் மடமையை உடையது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்