சொல் பொருள்

காதல்மயக்கம், அறிவு மயக்கம், யானையின் மதம், ஒரு சங்க காலத்து ஊர்,

சொல் பொருள் விளக்கம்

காதல்மயக்கம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Infatuation of love, confusion, Must of an elephant, a place in sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும்
மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும் – முல் 81-83

நெஞ்சம் (ஆற்றியிரு என்று தலைவன் கூறியபடி)பொறுத்திருக்க, (தன்)உறுதியைக் கெடுத்த தனிமையோடு,
நீண்ட பிரிவினை நினைந்து தேற்றியும், கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும்,
காதல் மயக்கம் கொண்டும், நெடிய பெருமூச்சுவிட்டும்,

முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து நல் அகம் பெற்றமை
மையல் உறுகுவள் அன்னை – நற் 297/8-10

முதிர்ந்த மிளகுக்கொடிகளின் பின்னலில் உறங்கிக் கிடக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவன்
மெல்ல வந்து உன் மார்பின் அடையப்பெற்றதனால் உண்டாயதன் காரணம் யாதென்று
மயக்கத்தைக் கொண்டிருக்கிறாள் அன்னை,

மையல் வேழம் மடங்கலின் எதிர்தர – குறி 165

மதக்களிப்புடைய களிறு எமனைப்போல் (எமக்கு)எதிரே வருகையினால்

பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும் மன் எயில் ஆந்தையும் – புறம் 71/11,12

பொய்யாத புதுவருவாயையுடைய மையல் என்னும் ஊர்க்குத் தலைவனான
மாவனும், நிலைபெற்ற எயில் என்னும் ஊரையுடைய ஆந்தையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.