Skip to content

சொல் பொருள்

மை தடவிய ஓலைச்சுவடியைப் பிடித்தல்,

சொல் பொருள் விளக்கம்

மை தடவிய ஓலைச்சுவடியைப் பிடித்தல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

holding the palm leaf smeared with ink

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து – பரி 11/88

மையோலையைக் கையில் பிடித்து சுவடி தூக்கி ஆடும் இளம் சிறுவரின் ஆட்டத்திற்கு மாறாக எழுந்து
– மையாடல் – மையோலை பிடித்தல். அஃதாவது, மை தடவப்பெற்ற நெடுங்கணக்கு முதலிய சுவடிகளைக்
கையில் ஏந்திப் பயிலுதல். இங்ஙனம் முதன் முதலாகச் சுவடி பிடித்தலை மையாடல் என்று பண்டையோர்
வழங்கினர் என்றுணர்க. மை:ஆகுபெயர்; மையோலை ஓலையின்கண்ணுள்ள எழுத்துக்கள் விளங்கித்
தோன்றும்படி சுவடியில் மை பூசுதலைச் செய்தலின் மையாடல் எனப்பட்டது எனினுமாம்.
-பொ.வே.சோ.உரை விளக்கம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *