சொல் பொருள்
மொட்டை – முழுவதும் மயிரற்ற தலை.
சொட்டை – இடை இடையே துள்ளி துள்ளியாய் மயிரற்ற தலை.
சொல் பொருள் விளக்கம்
மொட்டை என்பது அடிக்கப்படுவது. ‘மழுக்கை’ அல்லது ‘வழுக்கை’ என்பது மயிர் அறவே இல்லாமல் உதிர்ந்துவிடுவது. சொட்டுச் சொட்டாக நீர் விழுந்த இடம் போல வட்ட வட்டமாக மயிர் உதிர்ந்தது ‘சொட்டை’. மொட்டையும் சொட்டையும் அவரவர்க்கே கூட மனத்துயர் ஊட்டுவது உண்டு. ‘மொட்டை சொட்டை’ மரத்தில் இலையுதிர்தலைச் சுட்டவும் பின்னே வளர்ந்தது. ‘மொட்டைமாடி’ மொட்டான் (stool) என்பனவும் ஆட்சி பெற்றன. ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது,’ என்பது பழமொழி.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்