மோகூர் என்பது திருமோகூர் என்னும் சங்க காலத்து ஊர்
1. சொல் பொருள்
சங்க காலத்து ஊர்
2. சொல் பொருள் விளக்கம்
மோகூர் சங்ககாலத்து ஊர். இது இக்காலத்தில் திருமோகூர் என்னும் பெயரினைப் பெற்றுள்ளது.
சங்ககாலக் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் காலத்தில் இந்த மோகூரின் அரசன் பழையன்.
மோகூரில் வேந்தரும் வேளிரும் கூடினர். அவர்களுடன் செங்குட்டுவன் போரிட்டு அவர்களை வென்றதோடு
அவ்வூர் காவல்மரமான வேம்பையும் வெட்டி வீழ்த்தினான்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a city during sangam period
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர் வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி – பதி 49/7-9 வெல்கின்ற போரினையுடைய வேந்தரும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறி, மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின் வெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி, பழையன் மோகூர் அவை_அகம் விளங்க - மது 508 மோகூர் மன்னன் முரசம் கொண்டு - பதி 44/14 தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர்/பணியாமையின் பகை தலைவந்த - அகம் 251/10,11
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்