சொல் பொருள்
மோதிரம்
சொல் பொருள் விளக்கம்
மோதிரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ring, Finger-ornament, probably of the shape of plantain-flower
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: படு நீர் சிலம்பில் கலித்த வாழை கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம் மெல் விரல் மோசை போல காந்தள் வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப – நற் 188/1-5 நீர் வளமுடைய மலைச்சரிவில் செழித்து வளர்ந்த வாழையின் வளைந்த மடல்கள் ஈன்ற கூரிய வாயையுடைய குவிந்த மொட்டு ஒளிரும் இழையணிந்த மகளிரின் ஒளிவிடும் வளையல்களோடு பிணிப்புற்ற மெல்லிய விரல்களிலுள்ள மோதிரம் போல, காந்தளின் வளமையான இதழ்களில் தோய்கின்ற, வானத்தை எட்டும் மலைநாட்டினனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்