சொல் பொருள்
மீசை, தாடி, வாயின் கீழ்ப்புறம்
சொல் பொருள் விளக்கம்
முகவாய் என்பது மோவாய் எனத் திரிந்து நின்றது, ஈண்டு முகவாயின்கண் உள்ள மயிரைக் குறித்தது
இது மீசை; தாடியுமாம் என்பார் ஔவை.சு.து.அவர்கள்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
moustache, beard, chin
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை – நற் 211/5 வளைந்த முதுகினைக் கொண்ட இறா மீனின் நீண்ட மீசையையுடைய ஆண் புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை – அகம் 133/2 மெல்லிய கால்களையும் தாடியினையுமுடைய ஆண் வெள்ளெலி குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய் செவி இறந்து தாழ்தரும் கவுளன் – புறம் 257/3,4 குச்சுப்புல் நிரைத்தாற்போன்ற நிறம்பொருந்திய மயிரினையுடைய தாடியினையும் செவியிறந்து முன்னே தாழ்ந்த கதுப்பினையுமுடையவனாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்