சொல் பொருள்
(பெ) வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முடிந்ததும் உயிரை எடுத்துக்கொள்ளும் இறைவன்,
தமிழ் சொல்: கூற்றுவன்
சொல் பொருள் விளக்கம்
வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முடிந்ததும் உயிரை எடுத்துக்கொள்ளும் இறைவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
God of death
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யமன் இந்து மதத்தில் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் எமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சூரியனின் மகன். சனீஸ்வரனின் அண்ணன். உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல் அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன் வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லை மதியம் மறைய வரு நாளில் – பரி 11/4-10 மிக்க வெண்மையான நிறத்தைக்கொண்ட வெள்ளியானது இடபராசியைச் சேர, மேடராசியைச் செவ்வாய் சேர்ந்துநிற்க, பொருள்களை ஆராய்ந்தறிகின்ற புத்தி எனப்படும் புதன் மிதுன ராசியில் நிற்க, இருள் புலரும் விடியலில் கார்த்திகை உச்சமாக நிற்க, வியாழன் சனியின் இரட்டை இல்லங்களாகிய மகரம், கும்பம் ஆகியவற்றுக்கு மேலேயுள்ள மீனராசியைச் சேர, யமனைத் தமையனாகக் கொண்ட சனி தனுராசியின் பின்னர் உள்ள மகரராசியில் நிற்க, இராகு விரைவாக திங்களை மறைக்க வருகின்ற நாளில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வடசொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்