சொல் பொருள்

(வினா பெ) 1. எங்கு, எந்த இடம்,  2. எவ்வாறு, எத்தன்மையில்,

சொல் பொருள் விளக்கம்

எங்கு, எந்த இடம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

where, How, in what manner, of what nature

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சாந்து அழி வேரை சுவல் தாழ்ந்த கண்ணியை
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி – கலி 96/3,4

சந்தனமெல்லாம் அழிந்துகிடக்கிறது வியர்வையால்! தலைமாலை தோள்வரை தொங்குகிறது!
எங்கு சென்றுவிட்டு இங்கு வருகிறாய்?” “இப்போது கேள்

மான்ற மாலை வழங்குநர் செகீஇய
புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி
யாங்கு வல்லுநள்-கொல் தானே – நற் 29/4-6

இருள் மயங்கிய மாலைப்பொழுதில் வழிச்செல்வோரைத் தாக்கிக்கொல்ல
ஆண்புலி வழியை நோக்கிக்கொண்டிருக்கும் புல்லிய வழித்தடமான சிறிய பாதையில்
நடந்துசெல்ல எவ்வாறு ஆற்றலுள்ளவள் ஆனாளோ அவள்?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.