Skip to content

சொல் பொருள்

(பெ) 1. புதிய வருவாய், 2. புதிதுபடல், 

சொல் பொருள் விளக்கம்

புதிய வருவாய்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fresh income

freshness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் – பொரு 1
இடையறாத புதிய வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து

பாணர் வருக பாட்டியர் வருக
 யாணர் புலவரொடு வயிரியர் வருக என – மது 749,750

பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக,
கவியாகிய புது வருவாயினையுடைய புலவரோடு கூத்தரும் வருவாராக’, என்று அழைத்து

யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி – சிறு 25

புதிதாய்ப் பூத்தலையுடைய கோங்கின் ஒளிரும் மொட்டுக்களை இகழ்ந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.