சொல் பொருள்
வகை – வரவு வந்த அல்லது செலவிட்ட வழி.
தொகை – வரவு வந்த அல்லது செலவிட்ட தொகை.
சொல் பொருள் விளக்கம்
வகை, தொகை விளக்கமாக இருக்கவேண்டும் என்பதை எவரும் விரும்புவது இயற்கை. கணக்கு எழுதும் அன்று இன்னது எனத் தெளிவாக இருக்கும். ஆனால் ஆண்டுகள் சில கடந்தபின் நினைவில் இருக்குமோ? கணக்கு வகை, தொகை செம்மையாக இருந்தால் என்றும் கண்டு கொள்ளலாமே. செய்வன திருந்த செய்ய விழைவார் வகை, தொகை சீராக வைத்திருப்பார்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்