வத்தம் என்பது சோறு
1. சொல் பொருள்
(பெ) சோறு, சம்பா நெல்லரிசிச் சோறு
2. சொல் பொருள் விளக்கம்
இச் சொல் பெரும்பாணாற்றுப்படை தவிர, வேறு சங்க இலக்கியங்களில் மட்டுமன்றி, ஏனைச் செம்மொழி இலக்கியங்களிலும்
காணப்படவில்லை.
தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெறுவதற்காக நடந்து செல்லும் பெரும்பாணன் குடும்பத்தினர், செல்லும் வழியில்
பலதரப்பட்ட நிலங்களில் பலதரப்பட்ட மக்கள் தரும் உணவை உண்டவாறு செல்கின்றனர். அவ்வாறு மருதநிலத்துப் பகுதியில் செல்லும்போது அங்கிருக்கும் ஒருவர் வீட்டில் அவர்களுக்குக் கிடைக்கும் அரிசிசோற்றைப் புலவர் வத்தம் என்கிறார்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
cooked rice, Boiled Rice.
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்
வளைக்கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
சுடர்க்கடைப் பறவைப் பெயர்படு வத்தம்
சேதா நறுமோர் வெண்ணெயின் – பெரும் 302 – 306
ஞாயிறு பட்ட காலத்தே, பறவையினது பெயரைப் பெற்ற கருடன் சம்பா என்னும் நெல்லின் சோற்றையும்,
சுடர்க்கடை என்பது ஞாயிறு மறையும் மாலைநேரம். பறவைப் பெயர்படு வத்தம் என்பது கருடன் சம்பா நெல்லரிசிச் சோறு.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்