Skip to content

சொல் பொருள்

1. (வி) தங்கியிரு, வாழ், 

2. (பெ) தங்குமிடம்

சொல் பொருள் விளக்கம்

தங்கியிரு, வாழ், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

abide, stay, dwell

dwelling place

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை – குறு 5/2

தன்னிடத்தில் தங்கும் கொக்குகள் உறங்கும்படியான இனிய நிழலையுடைய புன்னைமரம்

அளிதோ தானே நாணே
ஆங்கு அவர் வதி_வயின் நீங்கப்படினே – குறு 395/7,8

இரங்கத்தக்கது நாணம்!
அங்கே அவர் வசிக்கும் இடத்திற்கு நீங்கிச் சென்றால்-(நாணம் அழிந்துபோகும்)

வெறி கொண்ட புள்_இனம் வதி சேரும் பொழுதினான் – கலி 123/12

ஒழுங்குமுறையில் பறந்து செல்லும் பறவைக் கூட்டம் தம் இருப்பிடம் சேரும் மாலைப்பொழுதில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *