Skip to content

சொல் பொருள்

(பெ) 1. திருமணம், 2. மண மாலை,

சொல் பொருள் விளக்கம்

திருமணம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

marriage, marriage garland

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ – கலி 39/38,39

“விண்ணைத் தொடுகின்ற மலைநாட்டைச் சேர்ந்தவனும், நீயும், திருமணத்தின்போது முன்னமே ஒருவரையொருவர் பார்த்தறியாதவர் போல் நடந்துகொள்வீர்களோ?

வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் – மலை 30

மணமாலை (இன்னும்)மணக்கும்(புதுமணம் மாறாத), (மொய்க்கும்)வண்டுகளும் மணம்வீசும் கூந்தலினையுடைய

வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117

தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்ட

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *