சொல் பொருள்
(ஏ.வி.மு) வருவாயாக,
சொல் பொருள் விளக்கம்
வருவாயாக,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Oh! come
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செல்க பாக நின் செய்வினை நெடும் தேர் விருந்து விருப்பு_உறூஉம் பெரும் தோள் குறு_மகள் மின் ஒளிர் அவிர் இழை நன் நகர் விளங்க நடை நாள் செய்த நவிலா சீறடி பூ கண் புதல்வன் உறங்கு_வயின் ஒல்கி வந்தீக எந்தை என்னும் அம் தீம் கிளவி கேட்கம் நாமே – நற் 221/7-13 செல்வாயாக பாகனே! உனது வேலைப்பாடு சிறப்பாக அமைந்த நெடிய தேரில்; விருந்தோம்பலில் விருப்பமுள்ள பெரிய தோளையுடைய இளமகளான தலைவி, மின்னலைப் போன்று ஒளிர்ந்து பளபளக்கும் அணிகலன்கள் நல்ல மாளிகையைச் சிறப்புறச் செய்ய நடத்தலைப் புதிதாகச் செய்து இன்னும் பழகாத சிறிய அடிகளையும், பூப்போன்ற கண்களையும் உடைய புதல்வன் உறங்கும்போது அவன் முன் சாய்ந்து, “வருவாயாக, என் அப்பனே!” என்று கூறும் அந்த இனிய சொற்களைக் கேட்டு மகிழ்வோம் நாம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்