Skip to content

வன்பு துன்பு(வம்பு தும்பு)

சொல் பொருள்

வன்பு – வல்லாண்மையால் துயரூட்டல்.
துன்பு – வல்லாண்மையின்றியும் சொல்லாலும் கரவாலும் துயரூட்டல்.

சொல் பொருள் விளக்கம்

“வன்பு துன்புக்குப் போகாதே; வன்பு துன்புகளில் மாட்டிக் கொள்ளாதே” என்பவை அறிவுரைகளாம். வன்படியாக என்பது ‘வம்படியா’ என வழங்குவது போல வன்பு ‘வம்பு’ எனவும் துன்பு ‘தும்பு’ எனவும் வழங்குகின்றனவாம். இனி, ‘வம்பு பொய்யும் வஞ்சமும் கலந்ததாம். அதனையோ, துன்புறுத்தலையோ கொள்ளாதே என்றுமாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *