Skip to content

சொல் பொருள்

(பெ.அ) 1. வலிய,  2. கடிய, 3. கடுமையான 4. வலிதாக ஏற்படுத்தப்பட்ட, செயற்கையான, 

சொல் பொருள் விளக்கம்

வலிய,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

strong, stern, severe, intense, artificial

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை – பெரும் 170

விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும்

உவலை கண்ணி வன் சொல் இளைஞர்
சிலை உடை கையர் கவலை காப்ப – மது 311,312

தழை விரவின கண்ணியினையும் கடிய சொல்லினையுமுடைய இளைஞர்
வில்லையுடைய கையை உடையராய்ப் பல வழிகள் கூடுமிடத்தே காவல்காக்க

பெரும் கை தொழுதியின் வன் துயர் கழிப்பி – பதி 76/6

பெரிய கைகளைக் கொண்ட கூட்டமான யானைகளின் கடுமையான துயரத்தைப் போக்கி,

இன்புற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும் – பரி 28/2

அந்த உறவினால் இன்புற்றதால் ஏற்பட்ட இயற்கை அழகும், செயற்கை அழகும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.