Skip to content

சொல் பொருள்

(பெ) சிங்கம், புலி முதலிய வலிய விலங்குகள், 

சொல் பொருள் விளக்கம்

சிங்கம், புலி முதலிய வலிய விலங்குகள், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

powerful animals like lion, tiger etc.,

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொறி வரி புகர்_முகம் தாக்கிய வயமான்
கொடு_வரி குருளை கொள வேட்டு ஆங்கு – பெரும் 448,449

‘ஆழமாய்ப்பதிந்த இரேகைகளும், புள்ளிகளும் உள்ள முகத்தினையுடைய யானையைப் பாய்ந்த அரிமா
(பின்னர்)புலியின் குட்டியைப் பாய்ந்து கொள்ள விரும்பினாற் போன்று

புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து
தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து
ஊட்டுறு பல் மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து
முல்லை பல் போது உறழ பூ நிரைத்து – நெடு 126-130

புலியின் உருவம் பொறிக்கப்பட்ட பொலிவு பெற்ற நிறத்தையுடைய தட்டம் போன்ற
தகடுகளால் நடுவுவெளியான இடம் மறையும்படி கோக்கப்பட்டு, குற்றமற்று
சாயம் ஏற்றப்பட்ட பல மயிர்களை (உள்ளே)பரப்பி, அதன்மேல் சிங்க
வேட்டை(க் காட்சியைப்) பொறித்து, அகன்ற இடத்தையுடைய காட்டிடத்து
முல்லைப் போது பலவற்றுடன் கலக்கும்படி (பிற)பூக்களையும் நிரைத்து

வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன – அகம் 99/1

வாள் போலும் வரிகளையுடைய வலிய புலியினது கொல்லும் தொழிலையுடைய நகம் போன்ற

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.