சொல் பொருள்
(பெ) வருகின்ற வழி, வருகின்ற விதம்,
சொல் பொருள் விளக்கம்
வருகின்ற வழி, வருகின்ற விதம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the way, path in which (s.b) comes, the manner of coming
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வம்ப மாக்கள் வருதிறம் நோக்கி செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் – நற் 298/1,2 பாலை வழியில், புதிய மக்கள் வருகின்ற தன்மையைப் பார்த்து, செம்மையான அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர் எழுப்பும் புருவை பன்றி வருதிறம் நோக்கி – அகம் 88/4 இளமை பொருந்திய பன்றி வரும் வழியைப் பார்த்து வீளை பருந்தின் கோள் வல் சேவல் வளை வாய் பேடை வருதிறம் பயிரும் – அகம் 33/5,6 சிள்ளென்று ஒலிசெய்யும் இரை கொள்வதில் வல்ல பருந்தினது சேவல் வளைந்த வாயையுடைய தனது பேடை தன்பால் வரும்விதத்தில் அழைக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்