Skip to content

சொல் பொருள்

(வி) வறண்டுபோ, (பெ) 1. நீர் அற்ற இடம், 2. மணற்பாங்கான இடம்,

சொல் பொருள் விளக்கம்

வறண்டுபோ,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

become dry, dried up place, sandy soil

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்ன
சேவலாய் சிறகர் புலர்த்தியோய் – பரி 3/25,26

பெரிய வானத்திலிருந்து நிற்காமல் வழிகின்ற மழைநீர் வறண்டுபோகும்படி, அன்னத்தின்
சேவலாய்ச் சிறகுகளால் உலரச் செய்தவனே

வறள் அடும்பின் இவர் பகன்றை – பொரு 195

நீர் அற்ற இடத்தில் எழுந்த அடும்பினையும், படல்கின்ற பகன்றையினையும்

வறள் அடும்பின் மலர் மலைந்தும் – பட் 65

மணற்பாங்கான இடத்தின் (அங்கு வளரும்)அடப்பம் பூவைத் தலையிலே கட்டியும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *