Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வெறுமை, உள்ளீடற்ற தன்மை, 2. சிறிதளவு, 3. வற்றியது, சுருங்கியது,

சொல் பொருள் விளக்கம்

வெறுமை, உள்ளீடற்ற தன்மை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

emptiness, hollowness

That which is little, small or insignificant

that which is emaciated, grown thin

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறிவும் உள்ளமும் அவர்_வயின் சென்று என
வறிதால் இகுளை என் யாக்கை – நற் 64/8,9

அறிவும் உள்ளமும் அவரிடம் சென்றதாக
வெறுமையாய்ப்போயிற்று தோழியே! என் உடம்பு;

நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் – நெடு 139,140

மிகுதியாக ஒளி சிந்தும் காதணி(குண்டலங்)களை நீக்கிட, சிறிய துளைகளில்
தாளுருவி அழுத்திய வெறுமையாகத் தொங்கும் காதினையும்

வறிது நெறி ஒரீஇ வலம் செயா கழி-மின் – மலை 202

சற்றே அவ்வழியைக் கடந்த பின்னர் வலப்பக்கமாகவே செல்லுங்கள்

வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே – சிறு 50

(பெருகி)வரும் நீரும் (கோபுர)வாயிலும் உடைய வஞ்சியை(யே) தரும் பரிசிலும் சிறிதாயிருக்கும்

வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு – கலி 7/1

வேனில்காலத்து வெம்மையால் துன்பமடைந்து உடல் சுருங்கி வருந்தி ஓய்ந்துபோன களிறுகள்

அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக
செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/12,13

தன் அறிவு வருத்தத்தில் ஆழ்ந்து ஏக்கம்கொள்ள, தன் அழகிய பெண்மை நலம் வற்றிப்போக,
செறிவாக இருந்த வளைகள் இவள் தோள்களில் கழன்று வீழும்படியாக இவளை நீ துறந்துசென்றாய்?;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *