சொல் பொருள்

(பெ) பொரித்த கறி, 

சொல் பொருள் விளக்கம்

பொரித்த கறி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Fried curry or meat

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பரல் வறை கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலை பயின்று இனிது இருந்து – பொரு 115,116

பருக்கைக் கற்கள் போன்று (நன்கு)பொரித்த பொரிக்கறிகளையும், தொண்டையில் மிதக்கும்படி
 உண்டபொழுதின், இடையறாது பழகி இனிதாக உடனுறைந்து,

சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி
ஞமலி தந்த மனவு சூல் உடும்பின்
வறை கால்யாத்தது வயின்-தொறும் பெறுகுவிர் – பெரும் 131-133

மேட்டுநிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த பருக்கையாகிய சோற்றை,
நாய்(கடித்துக்) கொணர்ந்த சங்குமணி(போன்ற) முட்டைகளையுடைய உடும்பின்
பொரியலால் மறைக்கப்படுமளவு மனைகள்தோறும் பெறுவீர்கள்

மரம்தோறும் மை வீழ்ப்ப
நிண ஊன் சுட்டு உருக்கு அமைய
நெய் கனிந்து வறை ஆர்ப்ப – மது 754-756

மரத்தடிகள்தோறும் செம்மறிக்கிடாயை வெட்டவும்,
நிணத்தையுடைய தசைகள் சுடுதலால் (அந்நிணம்)உருகுதல் பொருந்தவும்,
நெய் நிறையப்பெற்று வறுபடும் கறிகள் ஆரவாரிப்பவும்,

நெய் துள்ளிய வறை முகக்கவும்
சூடு கிழித்து வாடூன் மிசையவௌம் – புறம் 386/3,4

நெய்யினது துளியினையுடையவாய் வறுக்கப்பட்ட வறுவல்களை முகந்துண்ணவும்
சூட்டுக்கோலால் கிழித்து சுடப்பட்ட ஊனைத் தின்னவும்

மண்டைய கண்ட மான் வறை கருனை – புறம் 398/24

தான் உண்ணும், மண்டையிடத்துத் துண்டித்த மான் இறைச்சியாகிய வறுத்த பொரிக்கறியையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.