சொல் பொருள்
(பெ) வலப்புறமாகச் சுழியுஞ் சுழி.
சொல் பொருள் விளக்கம்
வலப்புறமாகச் சுழியுஞ் சுழி.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Curl winding to the right
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துறையே முத்து நேர்பு புணர் காழ் மத்தக நித்திலம் பொலம் புனை அவிர் இழை கலங்கல் அம் புனல் மணி வலஞ்சுழி உந்திய – பரி 16/5-7 நீராடும் துறைகளில், முத்துக்களை ஒன்றாகக் கட்டிய வடம், தலைக்கோலம் என்ற முத்தணி, பொன்னால் செய்யப்பட்ட ஒளிரும் அணிகலன்கள், கலங்கலான அழகிய நீரைப் போன்ற சிவந்த மணிகள், ஆகியவை, வலமாகச் சுழித்துக்கொண்டு வரும் சுழியினால் உந்தப்பட்டுவர,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்