Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. சூழ், சுற்று, 2. பின்னு, 3. சிக்கலுண்டாக்கு, 4. பின்னிக்கிட,  5. சுழற்று,

2. (பெ.அ) வலது,

சொல் பொருள் விளக்கம்

சூழ், சுற்று,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

encircle, surround, spin, as a spider its thread; plait; weave, tangle, complicate, entangle, entwine, brandish, swing around, right side

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மீன் சுடு புகையின் புலவு நாறு நெடும் கொடி
வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும் – புறம் 52/9,10

மீன் சுடுகின்ற புகையினது புலால் நாறும் நெடிய கொடிபோன்ற ஒழுங்கு
வயலிடத்து மருதினது வளைந்த கிளையைச் சூழ்ந்திருக்கும்

அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி – அகம் 111/5

காய்ந்த தலையினையுடைய ஞெமை மரத்தின் மீது பின்னிய சிலந்தியின் கூடானது

மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து – பரி 3/10,11

மாயவனே! உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம்,
அழிவற்ற வேதங்கள் சொன்னபடி முறைப்படி கூறாது, முன்னும் பின்னுமாக மாறி மாறி

கோட்டொடு சுற்றி குடர் வலந்த ஏற்றின் முன் – கலி 103/28

“கொம்புகளைச் சுற்றிக் குடல்கள் பின்னிக்கிடந்த காளையின் முன்

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப – நற் 149/1-4

சிலரும், பலருமாகக் கூடி, கடைக்கண்ணால் அக்கம்பக்கம் பார்த்து,
மூக்கின் உச்சியில் சுட்டுவிரலை வைத்து
தெருவில் பெண்டிர் கிசுகிசுப்பாய்ப் பழிச்சொற்களால் தூற்ற,
சிறிய கோலை ஏந்தி அது சுழலும்படி வீசிஅடிப்பவும் அன்னை வருத்த
– வலந்தனள் – சுழற்றினளாகி – பின்னத்தூரார் உரை

புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி – அகம் 215/4

அழகிய மாண்புற்ற வேலை வலப்பக்கம் ஏந்தி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *