சொல் பொருள்

(வி) 1. வெற்றியுண்டாகு,  2. வலப்பக்கமாகச் செல், 

சொல் பொருள் விளக்கம்

வெற்றியுண்டாகு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be victorious, pass from left to right

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வலம்பட நடக்கும் வலி புணர் எருத்தின்
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை – சிறு 189,190

வெற்றியுண்டாக நடக்கும், (இழுத்தற்குரிய)வலி பொருந்திய கழுத்தினால்
மனஉறுதி கொண்ட வலிமையான எருத்தினையுடைய உழவரின் தங்கையாகிய

வலம்படு முரசின் வெல் போர் வேந்தன் – புறம் 304/9

வெற்றியுண்டாக்கும் முரசினையும் வெல்லும் போரையுமுடைய வேந்தன்

துளங்கு நடை மரையா வலம்பட தொலைச்சி – அகம் 3/7

அசைந்தாடும் நடையைக் கொண்ட மரையா மானை வலப்பக்கம் வீழ்த்தி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.