Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கைவளை, 2. வளையம், வட்டம்,

சொல் பொருள் விளக்கம்

கைவளை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

armletring

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும்
தாளும் தோளும் எருத்தொடு பெரியை – பரி 13/53,54

உன் கைவளையும், தொப்புளும், தோளில் அணிந்திருக்கும் வளையமும்
திருவடியும், தோளும், உன் பிடரியுடனே பெரியனவாகக் கொண்டிருக்கிறாய்

எறி மகர வலயம் அணி திகழ் நுதலியர் – பரி 10/77

தாக்கிக் கொல்லும் சுறாமீன் வடிவத்தில் அமைந்த மகரவலயம் என்னும் அணி விளங்கும் நெற்றியையுடைய
மகளிர்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *