Skip to content

சொல் பொருள்

(பெ) வலைகொண்டு மீன் பிடிக்கும் மீனவர், வலைகொண்டு விலங்குகளைப் பிடிக்கும் வேட்டுவர்,

சொல் பொருள் விளக்கம்

வலைகொண்டு மீன் பிடிக்கும் மீனவர், வலைகொண்டு விலங்குகளைப் பிடிக்கும் வேட்டுவர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fishermen or hunters using net to catch their prey

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வலைவர் தந்த கொழு மீன் வல்சி
பறை தபு முது குருகு – ஐங் 180/2,3

வலைவீசும் மீனவர் கொண்டுவந்த மிகுதியான மீனைத் தனக்கு உணவாகக் கொள்ள
பறத்தல் இயலாத முதிய நாரை

வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல – கலி 23/17

வேடனின் வலையில் சென்று விழுந்த இளம் மானைப் போல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.