சொல் பொருள்
வளைகாப்புப் போடல் – மகப்பேற்றுக்கு அழைப்பு விழா
சொல் பொருள் விளக்கம்
வளையலும் காப்பும் போடுதல் பிறந்த குழந்தைப் பருவந்தொட்டே நடக்கத் தொடங்குவது. அதனைக் குறியாமல் ‘வளைகாப்புப் போடல்’ கருக்கொண்ட மகளை ஏழாம் மாதத்திலோ ஒன்பதாம் மாதத்திலோ தாய் வீட்டுக்கு மகப்பேற்றுக்காக அழைக்கும்போது விழாவாக நிகழ்த்தப் படுகின்றது. அன்று பலவகைச் சோறுகள் பண்டங்கள் ஆக்கிப் படைத்தலும், அவ்விழாவுக்கு வந்த மங்கல மகளிர் கன்னியர் குழந்தைகள் ஆகிய அனைவருக்கும் வளையல்போடுதலும் வழக்காம். வளையல் மகளிர் அணி; காப்பு ஆடவர் அணி. ஆனால் வளைகாப்பிலுள்ள காப்பு அணி குறியாமல் காவல் பொருள் தருவதாம். காப்புக் கட்டல் என்னும் ஊர் வழக்கை அறிக.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்