Skip to content
வள்ளை

வள்ளை, வள்ளல் அல்லது கங்குன் அல்லது வள்ளல் கீரை (Ipomoea aquatica) என்பது அரை நீர்த் தாவரம்

1. சொல் பொருள்

(பெ) 1. ஒரு நீர்நிலைக் கொடி, 2. மகளிர் நெற்குத்தும் போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு,

2. சொல் பொருள் விளக்கம்

  1. வள்ளைக்கொடிகள் மிக நெருக்கமாகப் பின்னிக்கிடக்கும்.
  2. வள்ளைக்கொடியின் இலை நீண்டு இருக்கும். இலை ஈட்டி முனை தோற்றமுடையது
  3. வள்ளைக்கொடியின் தண்டு உள்துளை உள்ளதாக இருக்கும்.
  4. பூக்கள் எக்காள வடிவிலும், பொதுவாக வெள்ளையுடன் மத்தியில் வெளிறிய ஊதா நிறத்துடன் காணப்படும்

கொற்ற வள்ளை என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு

வள்ளை
வள்ளை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Creeping bind weed, Ipomoea aquatica, Ipomoea reptans, Poir., kangkong, kangkung, water spinach, river spinach, water morning glory, water convolvulus, Convolvulus repens, A water plant and creeper

Song in praise of a hero, sung by women when husking or hulling grain

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

குன்றா சிறப்பின் கொற்ற வள்ளையும் - பொருள். புறத்:8/11
  அழி படை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ -    8/12
வள்ளை
வள்ளை
வள்ளை நீக்கி வய மீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர் – மது 255,256

வள்ளைக்கொடிகளை ஒதுக்கிவிட்டு வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு,
(தாம்)கொண்டவற்றைக் கூவிவிற்கும் கொடிய முடிச்சுக்களையுடைய வலைகளையுடையோர்,

இந்த வள்ளைக்கொடிகள் மிக நெருக்கமாகப் பின்னிக்கிடக்கும்.

அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி – அகம் 36/5

பின்னிக்கிடக்கும் வள்ளையின் அழகிய கொடிகளை உழப்பி,

வள்ளைக்கொடியின் இலை நீண்டு இருக்கும்.

பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பில – அகம் 256/1

பின்னிய தூறுகளையுடைய வள்ளைக்கொடியின் நீண்ட இலைச் செறிவில்

வள்ளைக்கொடியின் தண்டு உள்துளை உள்ளதாக இருக்கும்.

அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் – அகம் 6/17,18

அழகிய உள்துளையுள்ள வள்ளையின் மெல்லிய கொடிகளை உழப்பி,
வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய்

நெல்,தினை ஆகியவற்றை உரலில் இட்டு, இரண்டு பெண்கள் உலக்கையால் மாறிமாறிக் குற்றும்போது
பாடிக்கொள்ளும் பாடல் வள்ளைப்பாட்டு எனப்படும்.

பா அடி உரல பகு வாய் வள்ளை
ஏதில்_மாக்கள் நுவறலும் நுவல்ப – குறு 89/1,2

பரந்த அடிப்பகுதியையுடைய உரலிடத்து பகுத்த வாயாற் பாடும் வள்ளைப்பாட்டை
அயலோராகிய பெண்கள் குறையும் கூறுவர்;

தினை குறு_மகளிர் இசை படு வள்ளையும் – மலை 342

தினையைக் குற்றுகின்ற பெண்களுடைய தாளத்தோடு கூடிய வள்ளைப்பாட்டும்

கொல் யானை கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்
வள்ளை அகவுவம் வா இகுளை – கலி 42/7,8

கொல்லுகின்ற யானையின் கொம்பினால், மூங்கில் நெல்லைக் குற்றியவாறு நாம்,
வள்ளைப்பாடலாய்ப் பாடுவோம், வா, தோழியே!

மகளிர் வள்ளை கொய்யும் (பதிற்றுப். 29, 2).

தினை குறு வள்ளையும் புனத்து எழு விளியும் - வஞ்சி:25/26

வள்ளை தாள் போல் வடி காது இவை காண் - மணி:20/53

வாடு வள்ளை மேல் எலாம் வாளை ஏற பாய்வன - சிந்தா:1 66/2

மயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு - சிந்தா:1 168/1
வள்ளல் கீரை
வள்ளல் கீரை
வள்ளை நீக்கி வய மீன் முகந்து - மது 255

பா அடி உரல பகு வாய் வள்ளை/ஏதில்மாக்கள் நுவறலும் நுவல்ப - குறு 89/1,2

வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன் - ஐங் 26/2

வளை கை மகளிர் வள்ளை கொய்யும் - பதி 29/2

வள்ளை அகவுவம் வா இகுளை நாம் - கலி 42/8

வள்ளை அகவுவம் வா - கலி 42/9

அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி - அகம் 6/17

அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி - அகம் 36/5

அம் தூம்பு வள்ளை மயக்கி தாமரை - அகம் 46/5

பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பில - அகம் 256/1

அம் தூம்பு வள்ளை அழல் கொடி மயக்கி - அகம் 376/14

மயங்கு வள்ளை மலர் ஆம்பல் - புறம் 16/13

செறுவின் வள்ளை சிறு கொடி பாகல் - புறம் 399/6

தினை குறுமகளிர் இசை படு வள்ளையும்/சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் - மலை 342,343

நன்று ஆகின்றால் தோழி நம் வள்ளையுள்/ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி - கலி  41/40,41

வள்ளை கொண்டு இனிது இசை மறல பாடினர் - தேம்பா:1 52/3
கங்குன்
கங்குன்
தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவள - தேவா-சம்:2377/3

வெறித்து மேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி - தேவா-சம்:2563/3

கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் - தேவா-சம்:3624/3

வள்ளை வெண் மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில் - தேவா-சுந்:774/2

வந்து மா வள்ளையின் பவர் அளி குவளையை சாடி ஓட - தேவா-சம்:3759/2

துன்று அம் கிடங்கும் துறைதுறை வள்ளை வெள்ளை நகையார் - திருக்கோ:221/3

முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை - திருப்:478/1

வட மணி முலையும் அழகிய முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும் - திருப்:656/5

குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை கொள்ளை விழை மேவி - திருப்:658/2

பொருவன கள்ள இரு கயல் வள்ளை புரி குழை தள்ளி விளையாடும் - திருப்:659/1

துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு கள்ள விழியாலும் - திருப்:661/2

விலங்கி வள்ளையில் விழி என கிடப்ப மெல் அரும்பு - சீறா:64/2

வள்ளையை கிழித்து குமிழினை துரந்த மதர் விழிக்கு அஞ்சனம் எழுதி - சீறா:1203/1

வள்ளையை வாட்டி ஊசலை அசைத்து மண் எழில் ஆடவர் உயிரை - சீறா:1959/1

வள்ளை பாடி ஆடி ஓடி வா எனா அழைக்குமே - கலிங்:309/2

அம்மனை வள்ளை இன் இசை கேட்டும் - இலாவாண:14/52

நாள் வாய் வீழ்ந்த நறு நீர் வள்ளை
தாள் வாட்டு அன்ன தகை அமை காதின் - இலாவாண:15/88,89

பல் மலர் காவின் அம்மனை வள்ளையும்
குழலும் யாழும் மழலை முழவமும் - உஞ்ஞை:40/85,86

பங்கயம் குவளை ஆம்பல் படர் கொடி வள்ளை நீலம் - பால:10 18/1

வள்ளைமாக்கள் நிதியும் வயிரியர் - அயோ:11 31/3

விரிந்த குவளை சேதாம்பல் விரை மென் கமலம் கொடி வள்ளை
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி - கிட்:1 25/1,2

வள்ளை கத்தரிகை வாம மயிர் வினை கருவி என்ன - கிட்:13 53/1

கொண்டலின் குழவி ஆம்பல் குனி சிலை வள்ளை கொற்ற - கிட்:13 58/1

வள்ளை தண்டின் வனப்பு அழித்த மகரம் செறியா குழை என்றான் - சுந்-மிகை:4 7/4

வள்ளை மாக்கள் நிதியும் வயிரியர் - அயோ:11 31/3

மனை சிலம்புவ மங்கல வள்ளையே - பால:2 29/4

மாடம் நீத்தன மங்கல வள்ளையே - அயோ:11 23/4

வள்ளை குரு நாடர் மன் - நள:145/4

மா நீர் நெடும் கயத்து வள்ளை கொடி மீது - நள:155/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *