Skip to content

சொல் பொருள்

(பெ) 1. இயக்கம், இயங்குதல், 2. புழக்கம், பயன்பாடு, 3. நடைமுறை, 

சொல் பொருள் விளக்கம்

இயக்கம், இயங்குதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

moving, functioning, usage, practice

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 356

வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாயில்

கொடும் தாள் முதலை கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை – குறு 324/1,2

வளைந்த கால்களையுடைய முதலையின் கொல்லுதலில் வல்ல ஆணானது
வழியில் பிறர் செல்வதை இல்லாமற்செய்யும் கடற்கரைச் சோலையுள்ள அழகிய பெரிய துறையில்

ஏறு தொழூஉ புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி – கலி 101/9-11

ஏறுகளை அவற்றின் தொழுவினுள் (வாடிவாசலுக்கு உள்ளே) ஒரு சேர அடைத்தனர்
அவ்விடத்தில், முரசின் முழக்கத்தைப் போலவும், இடியினைப் போலவும் ஏறுதழுவும் களத்தின் முன்னே
ஆரவாரம் உண்டாக,
ஏறுதழுவும் நடைமுறையை எதிர்கொண்டு வந்து வந்து திரண்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.