Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. பூசு,  2. ஒழுகு, ஓடு

2. (பெ) 1. பாதை, 2. பின்வருவது,  3. தடம், சுவடு, 4. இடம், 5. உபாயம், 6. முறைமை, 7. சந்ததியினர், 

சொல் பொருள் விளக்கம்

பூசு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

smear, rub with hand, flow, path, That which is subsequent, footprint, place, means, manner, method, descendants

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் – நெடு 157

நுண்ணிய கூழ்(சாதிலிங்கம்)பூசின, உறுதியாக நிற்றலையுடைய திரண்ட கால்களை,

கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் – பெரும் 339,340

கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவிக் கவிழ்த்த
வடிந்து சிந்தின கழுநீர் வழிந்தோடிய குழம்பிடத்து

பாலை நின்ற பாலை நெடு வழி – சிறு 11

பாலைத் தன்மை நிலைபெற்றமையால் தோன்றிய பாலையாகிய, நீண்ட பாதை

சாறு கழி வழி நாள் சோறு நசை_உறாது
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந – பொரு 2,3

விழாக்கழிந்த அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது,
வேற்றுப்புலத்தை எய்த நினைத்த விவேகத்தை அறிந்த பொருநனே,

குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல் – பொரு 4

(மானின்)குளம்பு (பதிந்த)இடத்தைப் போன்று பகுக்கப்பட்ட (இரண்டு பக்கமும் தாழ்ந்து நடுவுயர்ந்த)பத்தலினையும்;

கண்ணில் காண நண்ணு வழி இரீஇ – பொரு 76

(தன்)கண்ணில் படும்படியாக (தனக்குப்) பக்கத்து இடத்தில் (என்னை)இருத்தி,

ஆ சேந்த வழி மா சேப்ப
ஊர் இருந்த வழி பாழ் ஆக – மது 157,158

பசுக்கள் இருந்த இடங்களில் விலங்குகள் தங்க,
ஊர்கள் இருந்த இடமெல்லாம் பாழிடம் ஆக,

நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல்
பன் மயிர் பிணவொடு கேழல் உகள
வாழாமையின் வழி தவ கெட்டு
பாழ் ஆயின நின் பகைவர் தேஎம் – மது 173-176

நல்ல ஏர் உழுத விரும்புதல் அமைந்த விளைகின்ற வயல்களில்
பல மயிரினையுடைய பெண்பன்றியோடு ஆண்பன்றி ஓடித்திரிய,
உனக்கு அடங்கி வாழாமற்போனதால் வாழும்வழி மிகவும் கெட்டு
பாழ்நிலம் ஆயின நின் பகைவர் நாடுகள்

செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப – மது 189

(நீ)சினந்த பகைவர் நின் சொற்படி நடப்ப

புன் பொதுவர் வழி பொன்ற – பட் 281

வளங்குன்றிய முல்லை நில மன்னர் கிளை(முழுதும்)கெட்டுப்போக

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *