சொல் பொருள்

1. (வி) வடி, வார், ஊற்று,  2. (பெ) செம்மை, திருத்தம்,

சொல் பொருள் விளக்கம்

வடி, வார், ஊற்று, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

pour, correctness, perfection

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சோறு வாக்கிய கொழும் கஞ்சி
யாறு போல பரந்து ஒழுகி
ஏறு பொர சேறாகி
தேர் ஓட துகள் கெழுமி – பட் 44-47

சோற்றை வடித்து வார்த்த கொழுமையான கஞ்சி
ஆற்றுநீர் போல (எங்கும்)பரவி ஓடி,
(அதைக் குடிக்க வந்த)காளைகள் தம்மில் பொருவதால் சேறாய் ஆகி,
(அச் சேற்றின் மீது)(பல)தேர்கள் ஓடுவதால் துகள்களாய் (மதில்கள் மீது)தெறித்து,
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463

பாணர் மண்டை நிறைய பெய்ம்மார்
வாக்க உக்க தே கள் தேறல் – புறம் 115/2,3

பாணருடைய மண்டைகள் நிரம்ப வார்க்கவேண்டி
வடிக்க உக்க இனிய கள்ளாகிய தேறல்

மெல்லிய நெஞ்சு பையுள் கூர தம்
சொல்லினான் எய்தமை அல்லது அவர் நம்மை
வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை
வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/8-11

எனது மென்மையான நெஞ்சில் வருத்தம் மிகும்படியாகத் தன்
வாக்குத்தவறிய சொல்லம்புகளால் என்னைத் துளைத்தாரே அன்றி, அவர் நம் மேல்
வல்ல ஒருவன் செய்த வடிவத்தில் திருத்தமான, விரைந்து செல்லக்கூடிய
வில்லின் அம்புகளை விட்டது இல்லை, அழகிய இழையணிந்தவளே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.