சொல் பொருள்
வாடல் – வாடிப் போனவை.
வதவல் – காய்ந்தும் காயாதும் இருப்பவை.
சொல் பொருள் விளக்கம்
இலை, காய், கனி முதலிய நீர்ப்பதப் பொருள்கள் வெப்பத்தாலும் வெப்பக் காற்றாலும் வாட்டமுறும். வாட்டமுற்றவை வாடலாம். செடி கொடிகள் நீர் வறட்சியாலும் வாடலுண்டு. ஆனால் வதவல் வேறு வகையினது. உலரப் போட்டும் முற்றிலும் உலராமல் அள்ளி வைத்துவிட அதிலுள்ள ஈரம் அகலாமல் தங்கிவிடுதலாம். வதவலாக இருப்பது தான் கெட்டுப் போவதன்றி தன்னை அடுத்ததையும் தன் பதத்தால் வதவலாக்கிக் கெடுக்கும். வாடிப் போனது வாடல்; “வாடவெற்றிலை வதங்க வெற்றிலை வாய்க்கு நல்லால்ல” என்பது நாட்டுப் புறப்பாட்டு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்