Skip to content

சொல் பொருள்

பெ) 1. ஏவல்,  2. வாய்மை பொருந்திய சொற்கள்,  3. வேதம், மறை, 

சொல் பொருள் விளக்கம்

ஏவல், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

order, command, truthful words, scripture

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர்
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப – மது 773,774

(பகைவரை)வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய இளைய பலராகிய கோசர்கள்
நடக்கின்ற நெறிமுறைமையால் உன்னுடைய ஏவல் கேட்டு அதன்படி நடக்க,

பொய் அறியா வாய்மொழியால்
புகழ் நிறைந்த நன் மாந்தரொடு – மது 19,20

பொய்மையே அறியாத (தங்களின்)மெய்மொழியால்
புகழ் நிறைந்த நல்ல அமைச்சர்களோடு

வரை போல் யானை வாய்மொழி முடியன் – நற் 390/9

மலை போலத் தோன்றும் யானைகளையும், வாய்மையான சொற்களையும் உடைய முடியன் என்பானின்

மாயா வாய்மொழி உரைதர வலந்து
வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரை பூவினுள் பிறந்தோனும் தாதையும்
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை – பரி 3/11-14

அழிவற்ற வேதங்கள் சொன்னபடி விரிவாக,
வேதங்களாகிய ஓடையில் மலர்ந்த
தாமரைப் பூவினில் பிறந்தவனாகிய பிரமனும், அவனுடைய தந்தையும்,
நீயே என்று கூறுகின்றன அந்தணரின் வேதங்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *