சொல் பொருள்
1. (ஏ.வி.மு) வரவேண்டாம், 2. (பெ) 1. கொள்ளையிடுதல் 2. நீளுதல்,
சொல் பொருள் விளக்கம்
வரவேண்டாம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
don’t come, robing, stealing, being long
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாரல் நாட நடுநாள் வாரல் வாழியோ வருந்துதும் யாமே – குறு 69/5,6 சாரல் நாட்டைச் சேர்ந்தவனே! நள்ளிரவில் வரவேண்டாம்! நீ வாழ்க! வருந்துகிறோம் நாம் வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி – நற் 304/1 கொள்ளையிடுதற்குரிய மெல்லிய தினையின் மணம் நிரம்பிய கதிரைக் கொய்துதின்று – பின்னத்தூரார் உரை வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி – நற் 304/1 நீளுதலுள்ள மெல்லிய தினையின் மணம் நிரம்பிய கதிரைக் கொய்துதின்று – வாரல் நீளுதலுமாம் – பின்னத்தூரார் உரை விளக்கம் தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர் அரி மான் வழங்கும் சாரல் – பதி 12/4,5 பிடரி மயிர் அழகுசெய்யும் கழுத்தினையும், நீண்ட கூரிய நகங்களையும் கொண்ட, சிங்கங்கள் நடமாடும் மலைச்சாரலில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்