சொல் பொருள்
(பெ) விச்சிக்கோ சங்ககால மன்னர்களில் ஒருவன்.
சொல் பொருள் விளக்கம்
விச்சிமலை நாட்டின் அரசன். விச்சிக்கோ, விச்சிக்கோன், விச்சியர்
பெருமகன் என்றெல்லாம் சங்கநூல்களில் இவன் குறிப்பிடப்படுகிறான்.
பாரி இறந்தபின் கபிலர் பாரிமகளிரை அழைத்துக்கொண்டு சென்று அவர்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு
இவனை வேண்டினார். விச்சிக்கோ பாரிமகளிரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A king in sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே – புறம் 200/8 விளங்கிய மணிகளால் செய்யப்பட்ட வளைந்த ஆபரனத்தையுமுடைய விச்சிக்கோவே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்