சொல் பொருள்
(பெ) தொழில்செய்வோர்
சொல் பொருள் விளக்கம்
தொழில்செய்வோர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
professional
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வலி மிகு வெகுளியான் வாள்_உற்ற மன்னரை நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் – கலி 46/7,8 வலி மிகும் சினத்தால் வாளை உருவிக்கொண்டு நின்ற மன்னர்களைச் சமாதானம் செய்யும் வழியை நாடி அவர்களை நண்பர்களாக்க முயலும் சான்றோர் போல மாறி மாறித் திரியும், பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு மதி மொழி இடல் மாலை வினைவர் போல் – கலி 68/1,2 இந்த உலகம் பொதுவானது என்ற பேச்சே பிறர்க்கு இல்லாமல் உலக முழுதும் ஆளும் மா மன்னர்க்கு அறிவு நிறைந்த அறவுரைகள் கூறும் இயல்புள்ள அமைச்சர்கள் போல, அலவு_உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல் உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம் – கலி 10/5-7 வருத்தமுற்றுக் குடிமக்கள் கூக்குரலிட, அறநெறி கெட்டுப் பொருளின்மேல் ஆசைகொண்டு, கொலைக்கு அஞ்சாத கொடிய அமைச்சரால் தனது நல்லாட்சியில் பிறழ்ந்த அரசனின் ஆட்சியின் கீழ் வாழும் நாட்டு மக்களின் உள்ளங்களைப் போல் வற்றிக் காய்ந்துபோன உயர்ந்த மரங்களைக் கொண்ட கொடிய பாலை வழியில் கைவல் வினைவன் தையுபு சொரிந்த சுரிதக உருவின ஆகி – நற் 86/5,6 கைவேலைப்பாட்டில் வல்லவனான கம்மியன் மணிகளைக் கோத்துச் செய்த சுரிதகம் என்னும் அணியைப் போன்ற உருவத்தைக்கொண்டனவாகி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்