சொல் பொருள்

(வி) 1. அதிசயி, ஆச்சரியப்படு, 2. நன்கு மதி

சொல் பொருள் விளக்கம்

அதிசயி, ஆச்சரியப்படு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wonder, esteem, admire

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே – புறம் 217/9

வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பு கைம்மிக்கது

மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே – புறம் 192/11-13

நன்மையான்
மிக்கவரை பெரிதும் மதித்தலும் இலம்
சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினும் இலம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.