சொல் பொருள்
விருவிட்டான்- ஒரு வகை பயறு, செடி
சொல் பொருள் விளக்கம்
திண்டுக்கல் வட்டாரத்தில் விருவிட்டான் பயறு என ஒன்று சொல்லப்படுகிறது. அது மற்றை வட்டாரங்களில் கல்லுப் பயறு எனப்படுவதாகும். விருவிட்டான் என்பதொரு முட்செடி. வெட்டிய உடனே எரிக்கத்தக்கதாக வறண்டசெடி அது. இப்பயறு தன் கெட்டித் தன்மையால் விருவிட்டான் செடிபோல – நீர்ப்பசையற்றதாகக் கூறப்பட்டதாகலாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்