Skip to content

சொல் பொருள்

(வி) 1. வேகமாகச்செல், 2. அவசரப்படு,

2. (பெ) 1. நறுமணம், 2. நறுமணப்பொருள், 

சொல் பொருள் விளக்கம்

வேகமாகச்செல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be speedy, swift, fast, hasten, hurry, fragrance, scent, perfume

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புரி உளை கலி_மான் தேர் கடவுபு
விரி தண் தார் வியல் மார்ப விரைக நின் செலவே – கலி 124/20,21

சுருள் சுருளான பிடரி மயிரைக் கொண்ட விரைந்தோடும் குதிரை பூட்டிய உன் தேரினைச் செலுத்தி
மலர்ந்த குளிர்ந்த மாலையையுடைய அகன்ற மார்பினையுடையவனே! விரைந்துசெல்லட்டும் உனது பயணம்.

விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி – திரு 123

வானமே வழியாக விரைந்த செலவினை மேற்கொண்டு

உள்ளம் பிணிக்கொண்டோள்_வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்
செய்_வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்கா தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் – நற் 284/3-8

நம் உள்ளத்தை வசமாக்கிக்கொண்டவளிடம், நெஞ்சம்
“அவளின் துன்பத்தைத் தீர்க்கத் திரும்பிச் செல்வோம்” என்று சொல்லும்;
“மேற்கொண்ட பணியை முடிக்காமல் அதற்கு இடையூறு விளைவிப்பது
வந்த நோக்கத்தையும் அடையாமல், பழிச்சொல்லையும் கொண்டுசேர்க்கும்” என்று
உறுதிப்பாட்டை தூக்கிநிறுத்தித் தாமதித்து, அறிவானது
“சிறிதளவுகூட கூடுதல் அவசரப்படவேண்டாம்” என்று சொல்லும்;

முளவு_மா வல்சி எயினர் தங்கை
இள மா எயிற்றிக்கு நின் நிலை அறிய
சொல்லினேன் இரக்கும் அளவை
வெல் வேல் விடலை விரையாதீமே – ஐங் 364

முள்ளம்பன்றியை உணவாகக் கொண்ட எயினரின் தங்கையான
இளமையும் மாநிறமும் உடைய பாலை நிலப் பெண்ணுக்கு உன் நிலையைப் புரிந்துகொள்ளும்படி
எடுத்துக் கூறினேன்; அவளது உடன்பாட்டை நான் இரந்து பெறும் வரை
வெல்லுகின்ற வேலையுடைய இளங்காளையே! நீ அவசரப்படவேண்டாம்.

விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 188

(வாசனைப்புகை முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும் மகிழ்ந்து

வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின் – சிறு 155

மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால்

சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து – திரு 235

சிறிய பசுமஞ்சளோடு மணமுள்ள சந்தனம் முதலியவற்றையும் தெளித்து,

நன் நெடும் கூந்தல் நறு விரை குடைய – மது 552

நல்ல நீண்ட கூந்தலில் மணமிக்க நறுமணத் தைலத்தை ஊடுருவித்தேய்க்க

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *