Skip to content

சொல் பொருள்

(பெ) 1. விளக்கு, 2. மோதிரம், 3. ஒளி

சொல் பொருள் விளக்கம்

விளக்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

lamp, ring, light

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ
கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட – முல் 48,49

நெய்யைக் காலுகின்ற திரிக்குழாயையுடையோராய் நெடிய திரியை (எங்கும்)கொளுத்தி
(பாவையின்)கைகளில் அமைந்த விளக்குகள் அவியுந்தோறும் (நெய் விட்டுத்)தூண்டிவிட –

பொலம் செய பொலிந்த நலம் பெறு விளக்கம்
வலி கெழு தட கை தொடியொடு சுடர்வர – மது 719,720

பொன்னாற் செய்ததினால் பொலிவு பெற்ற மணிகள் அழுத்தின மோதிரம்
வலி பொருந்தின பெரிய கையில் வீர வளையோடு விளக்கம் வர

செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 144

சிவந்த விரலில் மாட்டிய சிவந்த நிறத்தையுடைய (முடக்கு அல்லது நெளி என்னும்)மோதிரத்தையும்;(கொண்டு)

நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள – பரி 4/25

அனைத்தையும் அழிக்கவல்ல உன் வெம்மையும், அனைத்தையும் தெளிவுறுத்தும் உன் ஒளியும் ஞாயிற்றில்
இருக்கின்றன

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *