சொல் பொருள்
(வி) 1. விளக்குகளை ஏற்று, 2. ஒளிபெறச்செய், ஒளிரச்செய்,
சொல் பொருள் விளக்கம்
விளக்குகளை ஏற்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
light the lamp, brighten, give splendour to
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி – அகம் 141/9 தெருக்களில் விளக்குகளை ஏற்றி, மாலைகளைத் தொங்கவிட்டு பெரு வரை சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின் இரவும் இழந்தனள் அளியள் உரவு பெயல் – அகம் 192/12,13 பெரிய மலையிலுள்ள எமது சீறூரின் தெருவினை இருளகற்றி விளங்கச் செய்தலாலே இரவினுமிழந்தாள் ஆவாள் தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை நிலம் விளக்குறுப்ப மே தக பொலிந்து – மது 704,705 பொன்னின் ஒளி சூழ்ந்து குற்றமற்றுத் தகதகக்கும் பேரணிகலன்களால் நிலம் பிரகாசமடைந்து மேன்மை தகப் பொலிவுபெற்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்