சொல் பொருள்
(பெ) விளைதல், விளைச்சல், மகசூல்
சொல் பொருள் விளக்கம்
விளைதல், விளைச்சல், மகசூல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
produce, crop
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலை தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி – பட் 5-8 மேகம் பொய்த்தாலும் தான் பொய்யாத (காலந்தோறும் வருகின்ற), (குடகு)மலையை உற்பத்தியிடமாகக்கொண்ட கடற்பக்கத்துக் காவிரி(யின்) நீர் பரந்து பொன்(போல் விளைச்சல்) செழித்துப்பெறுகும் – (28-பெரிய சோழநாட்டில்), விளைதல் தொழில் அற்றுப்போகாத அகன்ற வயல்களில்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்