சொல் பொருள்

1. (வி) கீழ் நோக்கி விசையுடன் இறங்கு,

2. (பெ.அ) சிறந்த, மேன்மையான,

சொல் பொருள் விளக்கம்

கீழ் நோக்கி விசையுடன் இறங்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fall down

excellent, lofty

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விழுந்த மாரி பெரும் தண் சாரல் – நற் 244/1

விழுந்த மழையால் பெரிதும் குளிர்ந்துபோன மலைச்சாரலில்

பொன் மலிந்த விழு பண்டம் – மது 81

பொன் மிகுதற்குக் காரணமான சீரிய சரக்குகளை

வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர் – அகம் 35/6

வில்லையே ஏராகக் கொண்ட வாழ்க்கையை உடைய, சிறப்பாக அம்பு எய்யும் மறவர்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.