சொல் பொருள்
1. (வி) கீறு, பீறு,
2. (பெ) 1. தனிச்சிறப்பு, 2. வேறான தன்மை, 3. பெருமை, 4. பெருமிதம், 5. தோற்றப்பொலிவு, 6. வெற்றி
சொல் பொருள் விளக்கம்
கீறு, பீறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
scratch, as with the point of an instrument, tear, distinctive excellence, separateness, greatness, majesty, stateliness, dignity, grandeur, splendour, victory
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் குதிரையோ வீறியது கூர் உகிர் மாண்ட குளம்பின் அது – கலி 96/22-25 சேவகனே! ஞாயிற்றின் கதிர்கள் விரிகின்ற விடியற்காலையில் கையால் வாரப்பெற்ற மதுரை நகரின் பெரிய முற்றத்தைப் போல, உன் உடம்பின் மீது அந்தக் குதிரையோ பிறாண்டியது? கூர்மையான நகத்தைக் கொண்ட குளம்பினையுடையது, பசித்த ஒக்கல் பழங்கண் வீட வீறு சால் நன் கலம் நல்கு-மதி பெரும – புறம் 389/14,15 பசித்த என் சுற்றத்தாருடைய துன்பம் கெட சிறப்பமைந்த நல்ல கலன்களை நல்குவாயாக பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி முட்டை கொண்டு வன்_புலம் சேரும் சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப சோறு உடை கையர் வீறு_வீறு இயங்கும் இரும் கிளை சிறாஅர் காண்டும் – புறம் 173/5-9 காலம் தப்பாத மழை பெய்யும் காலத்தைப் பார்த்து தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தினை அடையும்l மிகச் சிறிய எறும்பினது சிலவாகிய ஒழுக்கத்தை ஒப்ப சோறுடைக் கையினராய் வேறு வேறு போகின்ற பெரிய சுற்றத்தாரோடும் கூடிய பிள்லைகளைக் காண்பேம் விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர் – அகம் 227/19 மிக்க பொருள் நிலைபெற்றிருக்கும் பெருமை கொண்ட அழகிய நகராகிய வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி திரு நயந்து இருந்து அன்ன தேம் கமழ் விறல் வெற்ப – கலி 44/5-7 வரிகள் விளங்கும் நெற்றியையுடைய அழகிய இரு யானைகள் பூவுடன் கலந்த நீரை மேலே சொரிய முறுக்குவிட்டு மலர்ந்த தாமரை மலரின் உள் இதழ்களில் பெருமிதத்துடன் திருமகள் விரும்பி இருப்பதைப் போன்று தோன்றும் மலர் மணம் கமழும் சிறந்த மலைநாட்டுத் தலைவனே! வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 282,283 வேறு வேறாகிய பல வடிவினையுடைய குறிய பலராகிய பணியாளர், விழாவெடுத்த களத்தின் பொலிவுபெறத் தோன்றி, வாள் மிகு மற மைந்தர் தோள் முறையான் வீறு முற்றவும் – மது 53,54 வாட்போரில் மிகுந்த வலிமை (கொண்ட)மைந்தர்கள் (தம்)தோளால் முறையாகச் செய்யும் வெற்றி முற்றுப்பெறவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்