Skip to content

சொல் பொருள்

(பெ). துண்டம், 2. (பெ.அ) தனிச்சிறப்புள்ள, வீறு – தனிச்சிறப்பு,

சொல் பொருள் விளக்கம்

துண்டம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

piece, eminent, distinct

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெளிற்று பனம் துணியின் வீற்றுவீற்று கிடப்ப
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை – புறம் 35/22,23

இளைய பனையினது துண்டம் போல வேறுவேறு கிடப்ப
களிற்றுத் திரளைப் பொருத இடம் அகன்ற போர்க்களத்தின்கண்

வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும் – மலை 68

வேறெங்கும் காணமுடியாத செழிப்பு நாளும் உண்டாகும் அவனது நாடு விளைக்கும் உணவுகளையும்
– வீறு – வேறொன்றற்கில்லாத சிறப்பு – பொ.வே.சோ,உரை விளக்கம்

வில்லோர் மெய்ம்மறை வீற்று இரும் கொற்றத்து
செல்வர் செல்வ சேர்ந்தோர்க்கு அரணம் – பதி 59/9,10

வில்வீரர்களுக்குக் கவசம் போன்றவனே! வீறுபெற்று இருக்கும் பெரும் அரசாண்மையுடைய
வேந்தர்க்கெல்லாம் வேந்தனே! உன்னைச் சேர்ந்திருப்போருக்கு அரணம் போன்றவனே!
– வீற்றையுடைய கொற்றத்தை வீற்றிருங்கொற்றம் என்றார். வீறு – பிறிதொன்றிற்கில்லாத சிறப்பு
– ஔவை.சு.து.விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *